அரசு மருத்துவமனை சீரழிக்கும்- குமார்- ஆசியா-கணேஷ்குமார்-லெனின்-சந்திரா - உமாராணி மற்றும் இணை இயக்குனர் பரிமளா செல்வி மீது நடவடிக்கை எடுங்கள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 April 2023

அரசு மருத்துவமனை சீரழிக்கும்- குமார்- ஆசியா-கணேஷ்குமார்-லெனின்-சந்திரா - உமாராணி மற்றும் இணை இயக்குனர் பரிமளா செல்வி மீது நடவடிக்கை எடுங்கள்.

பெரியகுளம் பகுதி மக்கள் அரசின் இலவச மருத்துவத் தேவையை எதிர்பார்த்து உயிர்போகும் அவலம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இவை நூற்றாண்டு பாரம்பரியமிக்க மருத்துவமனையாகும். நாள் ஒன்றுக்கு சுமார் 1000 முதல் 1500 வரையிலான புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 

சுமார் 260 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாகும். மிக குறைந்த எண்ணிக்கையிலான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம் மருத்துவமனை வளாகத்திலேயே மாவட்ட ஊரகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ளது. இருதயம் மருத்துவம், பச்சிளம் குழந்தை பராமரிப்பு, ஸ்கேன் பிரிவு, மயக்க சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு, தீக்காயப் பிரிவு, காசநோய் பிரிவு, தொற்றா நோய் பிரிவு, டயாலிசஸ் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, மகப் பேறு மருத்துவப் பிரிவு என அனைத்துப் பிரிவுகளும் செயல்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் போதிய சிகிச்சை அளிக்க முடியாமல் மேல் சிகிச்சை என்ற பெயரில் நோயாளிகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 


தொற்றா நோய் பிரிவு, டயாலிசஸ் பிரிவுக்கு 1.30 கோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்டும் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செவி திறன் அளவிடும் கட்டிடம் கட்டப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் டெக்னீசியன் இல்லாததால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதோடு மருத்துவம் பெற முடியாமல் உள்ளது, தேசிய தரச்சான்று பெற்ற இம் மருத்துவமனை தற்சமயம் மருத்துவர்கள் பற்றாக்குறையால் தரமற்ற, சிகிச்சைக்கு வழிவகை செய்யும் மருத்துவமனையாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயம் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், மருத்துவப் பயனாளிகளும், வேதனை பட தெரிவிக்கின்றனர். 


இம்மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப் படுவதில்லை.MD மருத்துவர் பற்றாக்குறையால் தீவிர இருதய சிகிச்சைப் பிரிவு (ICCU) செயல்படாமல் இருந்து வருகின்றது. வெளி மருத்துவமனைகளில் இருந்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை MD மருத்துவர்கள் வரவழைக்கப்ட்டு சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு வரவழைக்கப்படுபவர்களும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே பணியாற்றி விட்டு சென்று விடுகின்றனர். 


24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பகல் 12 மணிக்கெல்லாம் மருத்துவர்கள் இல்லாமையின் காரணமாக பொது மருத்துவம் முடங்கிப் போய் உள்ளது. முதன்மை குடிமைப்பணி மருத்துவர்கள் பட்டியல் பெயர் பலகையில் எந்த ஒரு மருத்துவர்கள் பெயரும் இல்லாமல் உள்ளது. பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கண் சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது. மகப்பேறு மருத்துவப் பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்க்க முடியாமல் உள்ளது. கர்ப்பினித் தாய்மார்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். 


இரவு நேரங்களில் பிரசவம் பார்ப்பதில்லை. கர்ப்பினி தாய்மார்களை பயம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சம்மந்தப்பட்ட மருத்துவர்களை போனில் தொடர்பு கொண்டால் அவர்கள் கூறும் விசயம் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இரவில் நான் பிரசவம் பார்த்து குழந்தை வெளியில் எடுத்தால் குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்தால் அவற்றை சரி செய்யகுழந்தைகள் நல மருத்துவர் கிடையாது இதனால் இரவில் பிரசவம் பார்க்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகின்றார். மேலும் இரத்தம் 10 பாயின்ட் இருந்தால் மட்டுமே பிரசவம் பார்க்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 


மேலும் கர்ப்பினிதாய்மார்களுக்கு உயிர் பயம் ஏற்படுத்தி தேனிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இரவு நேரங்களில் மயக்க மருந்து நிபுணர் இல்லாமல் இருப்பதால் சிகிச்சையளிக்க முடியாமல் உள்ளது. இம் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மருத்துவ பற்றாக்குறையை சரி செய்ய மருத்துவத்துறை இயக்குநரகத்திற்கு தெரியப்படுத்தியும் போதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.


மருத்துவம், ஊரகம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் அவர்களிடம் தெரிவித்தும் பலன் இல்லை. மருத்துவமனை கண்காணிப்பாளர், மற்றும் நிலைய மருத்துவர் ஆகியோர் காலை 10 மணிக்கு பணிக்கு வந்து 12 மணிக்குள் பணி முடித்து சென்று விடுவதால் இடைப்பட்ட காலங்களில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் நலனில் இம் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் அக்கரை கொள்வதில்லை. மாறாக பணி சுமை குறைந்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர்.கர்ப்பினி தாய்மார்கள் பரிசோதனைக்காக இம்மருத்துவமனைக்கு காலை 7 மணி முதல் காத்திருந்தும் மகப் பேறு மருத்துவர்கள் 10 மணிக்கு வருவதால் கர்ப்பினி தாய்மார்கள் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. மேலும் இங்கு செயல்பட்டு வரும் ஆய்வகத்தில் 6 நபர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 


இதனால் ஆய்வகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு மன உளைச்சலில் உள்ளனர். சூழ்நிலையின் காரணமாக தவறான விபரீதமான முடிவுகளை மேற்கொண்டு உயிருக்கு போராடி வரும் நபர்களுக்கு உரிய துரித மருத்துவ சேவை வழங்குவதில் மருத்துவர்கள் இல்லாததால் சிரமம் ஏற்படுகின்றது. தற்காலிக பணியாளர்களே புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு தேவையான ஒரு சில மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர். 


அவசர கால வாகனம் 108 இம் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இருப்பினும் அவசரங்களுக்கு பயன்படுத்தப்படாமல் சிறு காயம், உடல் ரீதியான சிறு சிறு பிரச்சினைகளுக்கும் தேனிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை என்ற பெயரில் பரிந்துரை செய்து அனுப்பி வைக்கின்றனர். இம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் தங்களது வேலைகளை சரிவர செய்வதில்லை, மாறாக ஒப்பந்த பணியாளர்களை வைத்து அதிகப்படியான வேலைகளை மேற்கொள்ளச் செய்கின்றனர். 


சுமார் 34 மருத்துவர்களுக்கும் மேலாக பணிபுரிய வேண்டிய இம் மருத்துவமனையில் 12க்கும் குறைவான மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறையால் இரவு பணிக்கும் மாறி மாறி ஒரே மருத்துவரை பயன்படுத்துவதால் குறைந்த அளவு எண்ணிக்கை உடைய இம் மருத்துவர்களுக்கு மிகுந்த பணிச்சுமை, மற்றும் மன உளைச்சலில் உள்ளனர். இதிலும் ஒரு சில மருத்துவர்கள் விருப்பப் பட்டு பணி மேற்கொள்வதுண்டு. மருத்துவர்கள் பற்றாக்குறையால் அதிக வேலைப் பளுவுக்கு ஆளான ஒரு சில மருத்துவர்கள் வேறொரு ஊருக்கு மாறுதல் பெற்றுச் செல்கின்றனர். 


மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது தெரிந்தும், போதிய ஆதாயம் பெற்றுக்கொண்டு மருத்துவர் தட்டுப்பாட்டை போக்கும் விதம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் பணி மாறுதல் வழங்குகின்றனர். இவை சம்மந்தமாக இணை இயக்குநர் அவர்களிடம் கேட்டால் எந்த ஒரு பலனும் இல்லை. உடல் ரீதியான பிரச்சனைக்கு ஆளான நிலைய மருத்துவரும் தாம் நிம்மதியாக பணி ஓய்வு பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அவரும் யாதொரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. 


ஊரக மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் திருமதி.பரிமளா செல்வி அவர்களும் மருத்துவர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. புற நோயாளி பிரிவு பகல்12 மணி வரையில் கூட செயல் படுவதில்லை. 10:30 மணிக்கெல்லாம் மருத்துவர்கள் சென்று விடுவதால் அவசர சிகிச்சைப் பிரிவில் புறநோயாளியாக வரும்மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறைந்த அளவு எண்ணிக்கை உடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் மட்டுமே கொண்டு இம் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது எனலாம். மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்தாலும் இம் மருத்துவமனையில் கையூட்டு பெறும் நிலைமை இன்னும் மாறவில்லை. குறிப்பாக பிரசவத்திற்கு ஆண் குழந்தை என்றால் ரூ 3000 வரையிலும் பெண் குழந்தை என்றால் 2000 வரையிலும் கையூட்டு பெற்று வருகின்றனர். 


மொத்தத்தில் இம்மருத்துவமனையில் சரியான நிர்வாக திறன் இல்லாமல் இருப்பதே காரணம் என்று சமூக ஆர்வலர்களும், மருத்துவப் பயனாளிகளும் குறை கூறுகின்றனர். தலைப்பண்பு இல்லாமல் உள்ள இம் மருத்துவமனைக்கு, போதிய மருத்துவர்கள் இல்லாததால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது. முறையான மருத்துவ வசதி கிடைக்காததால், சிறப்பு மருத்துவர்கள் இல்லாததாலும் , முதுநிலை உதவி மருத்துவர்கள், மற்றும் முதன்மை குடிமைப்பணி மருத்துவர்கள் பணி இடம் காலியாகவே இருப்பதாலும், போதிய மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அவற்றை கையாள போதிய மருத்துவர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கைக மேற்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அரசு இலவச மருத்துவ சேவையை உறுதி படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மருத்துவ பயனாளிகளும் கோரிக்கை வைக்கின்றனர். 


மேலும் இம் மருத்துவமனையில் என் குவாஸ் எனப்படும் திட்டத்தின் கீழ் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது பணியை இவர்கள் ஒழுங்கே செய்வது கிடையாது. இம்மருத்துவமனையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் மருத்துவர் குமார், மருத்துவர் ஆசியா ஜாபர் மற்றும் செவிலியர்கள் கணேஷ்குமார், லெனின், சந்திரா-ஜெயலட்சுமி-கங்காதேவி-உமாராணிஉள்ளிட தலைமைச் செவிலியர்கள் பணி மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அவர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இம் மருத்துவ மனையின் அவலங்களை தமது ஆய்வின் மூலம் ஆராய்ந்து மருத்துவ மனையின் நிறை குறைகளை பட்டியலிட்டும், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் சமர்ப்பித்து பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். 


அதனடிப்படையில் கடந்த 17, 18, 19.3.2023ம் தேதிகளில் மருத்துவத்துறை இயக்குநர் ( DMS) அலுவலகத்தில் இருத்து திரு.அசோகன் அவர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை வளாகம் தூய்மையின்றி காணப்பட்டுள்ளதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் விதத்தில் இருந்தது குறித்தும் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இவரது வருகை தெரிந்தே அவசர அவசரமாக மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களுக்கு வர்ணம் பூசியுள்ளனர். 


மேலும் இவரது ஆய்வில் சிக்கிய பல்வேறு விஷயங்களை NQAS (தேசிய தர உறுதி தர நிலைகள்) கமிட்டியிடம் ஒப்படைத்துள்ளார் என தெரிகின்றது. மேலும் ஒரு மருத்துவமனைக்கு ஏற்ற உகந்தசூழல் இம் மருத்துவமனையில் இல்லை என கடிந்து கொண்டதாகவும் தெரிகின்றது. இதனைத் தொடர்ந்து 27, 28, 29.3 2023 ஆகிய தேதிகளில் NQAS கமிட்டியினர் மருத்துவர்கள், நீஷாந்த் குமார் ஜேஸ்வால், அபி உதய் சக்தி திவாரி, விஜய் சந்திர ஜான் ஆகிய மருத்துவர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் தூய்மை, மருந்துகள்.மற்றும் மருத்துவ உபகரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 


முறையான கள ஆய்வின் மூலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை களைந்து, மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கி பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நல் வாழ்வைப் பேணும் வகையில் பொதுமக்களுக்கு அலைக்கழிப்பு இல்லாமல் சிறப்பு மருத்துவர்கள் மூலம் அரசின் இலவச பொது மருத்துவம் 24 மணி நேரமும் தொடந்து கிடைத்திடும் வகையிலும், இம் மருத்துவமனையில் பகலில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கை போலவே இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் பணி புரிந்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் மருத்துவத் துறைக்கு, பெரியகுளம் அஇஅதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் கோரிக்கை. 

No comments:

Post a Comment

Post Top Ad