தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பங்குனி மாதம் 3/4/2023 திங்கள்கிழமை சோமவார பிரதோஷ வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதசுவாமிக்கும் ஒன்பது வகையான அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தார்கள் வருகை புரிந்த பக்தர்களுக்கு கட்டளைதாரர்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது சிறப்பான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்யப்பட்டது.
வருகிற 5-4.2023 புதன்கிழமை பெளர்ணமி கிரிவலம் மற்றும் சிறப்பான அன்னதானம் நடைபெறும்
No comments:
Post a Comment