காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 April 2023

காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவில் திட்டமிட்டு கல்வீசி. காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி  நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம், அவரது பிறந்த நாளினை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். மேலும் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டியல் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் பட்டியல் இனத்தவர்கள் சார்பிலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை கோவில் திருவிழா போல் அக்னி சட்டி ஏந்தியும்,  மாவிளக்கு மற்றும் முளைப்பாறை எடுத்து ஊர்வலமாக சென்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தும், அம்பேத்கர் அவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டு அவரைப் போற்றி வழிபடுதலை கடைபிடித்து வருகின்றனர்.


அதேபோல் இந்தாண்டும் 2023- ஏப்ரல் 14 காலை எட்டு முப்பது மணி அளவில் தொடங்கிய பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இரவு 10 மணி வரை நீடித்தது திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும்  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க .தமிழ் செல்வன் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் முன்னிலையில் பெரியகுளம் நகர கழக செயலாளர் முகமது இலியாஸ் உள்ளிட்ட மாவட்ட,நகர ,ஒன்றிய கழக நிர்வாகிகள் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், மேலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். .



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓபிஎஸ் அணியினர் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .இறுதி நிகழ்ச்சியாக பெரியகுளம் அருகே உள்ள தெ. கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய வருகை தந்தனர். இந்நிலையில் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்த ஊர்வலமாக வந்திருந்தனர். 


இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் சங்கமித்ததால் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து விரைந்து வந்து காவல்துறையினர் தெ. கள்ளிபட்டி பகுதியில் இருந்து வருகை தந்த பொதுமக்களை சற்று நேரம் தடுத்து நிறுத்தி பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியிலிருந்து வந்த பொது மக்களுக்கு வழிவிட்டுக்கொடுத்து மாலை அணிவித்து மரியாதை செய்ய வைத்தனர்.


இந்நிலையில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சில நண்பர்கள் சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த ஒளி பெருக்கி இயங்கும் இடத்திற்கு அருகே சென்று  பாடல் போடும்படி வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. அப்பொழுது கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து கொண்டிருந்த படியால் பாடல் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் சிறிது கூச்சல் ஏற்பட்டது .கூச்சலை கட்டுக்குள் கொண்டு வர பெரியகுளம் காவல் ஆய்வாளர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முயற்சித்தனர்.


இதனை பயன்படுத்திக்கொண்ட பஜகவை சேர்ந்த சிலர் திட்டமிட்டு காவல் ஆய்வாளரை தாக்கி விட்டு பெரியகுளம் காவல் நிலையம் சென்று காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளரின் வாகனம், மற்றும் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவசரகால வாகனமான 108 வாகனத்தின் முகப்பு கண்ணாடி, மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை உடைத்து, சேதப்படுத்தி , தகாத வார்த்தைகளால் வசை பாடி,காவல் நிலைய நுழைவு வாயிலை இழுத்து உடைக்க முயற்சி செய்தனர்.


மேலும் கற்கள் கொண்டு போலீஸார் மீது தாக்குதலும் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது, காவல் நிலையம் தாக்குதல் சம்பவத்தால் கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தினர்-பதிலுக்கு கூட்டத்தில் இருந்து சிலர் கற்க்களை கொண்டு காவல்துறையை நோக்கி எறிந்து பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்-அந்தப் பகுதி முழுவதும் சிறிது நேரத்தில் கலவரமாக மாறியது, இச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமயிலான காவலர்கள் விரைந்து  வ வந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு கலவரத்திற்கு காரணமான பலரை கைது செய்தனர். 


14. 04. 2023 இரவு வரை சுமார் 70 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா. தமிழ்வாணன், ஜோதிமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மு .ஆண்டி, மது தொல்.தளபதி, இரும்பு துரை என்ற காமு , செல்வராசு சக்திவேல், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்று காவல்துறையினரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். .


மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையினருக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவற்றில்  பெரியகுளத்தில் ஏப்ரல் 14 அன்றுநடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின் பொழுது ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு காரணம் ,ஒற்றுமையாய் உள்ள பட்டியலினத்தினரிடையே  பிரிவினையை தூண்டும் விதத்தில் செயல்பட்ட பாஜகவே காரணம் பாஜகவினர் ஒரு சந்து பகுதியிலிருந்து கற்களை வீசி பொதுமக்களை தாக்கி, கலவரத்தை உண்டு பண்ணி ஒற்றுமை சிதைவு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், காவல் நிலையத்தின் மீது கல்லெறி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும் கூறினார்கள். 


மேலும் பெரியகுளம் பகுதியில் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெரியகுளம் மூன்றாந் தல் பகுதியிலிருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்கள் ஒன்று திரண்டு பாஜகவுக்கு எதிராக அமைதி பேரணி நடத்தி சமத்துவ உறுதி மொழி ஏற்றனர். 


இந்த பேரணியை சீர்குலைக்கும் விதமாகவும், ஒற்றுமையை கெடுக்கும் நோக்கத்தோடும் இரவு நடைபெற்ற ஊர்வலத்தின் போது பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு கல்லெறி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.


பெரியகுளத்தில் அசாதரண சூழ்நிலை ஏற்பட காரணமாக இருந்த பாஜக கட்சியினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதோடு, கைது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும் காவல் நிலையம் தாக்குதல் - மற்றும் காவலர் மீது தாக்குதல் போன்ற செயலில் திட்டமிட்டு ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நபர்களை விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்-அதேசமயம் விரும்ப தகாத செயலில் ஈடுபட்ட நபர்கள்மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவர்கள் - பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் என்பதால்.அவர்களது கல்வி பாதிக்கப்படுவதாகவும்-அப்பாவி மக்களும் கைது நடவடிக்கையால் பாதிக்கப்படுவதாகவும் அதனால் கைது நடவடிக்கை வேண்டாம்-என்று கேட்டு இன்று தேனி மாவட்ட ஆட்சியரை முகாம் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவையும் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலையிலான குழு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad