பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் மருத்துவ தேவையை எதிர்பார்க்கும் நபர்களது சிரமத்தை தடுக்கும் வகையில் கலவர தடுப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்திட வேண்டி மனு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 April 2023

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் மருத்துவ தேவையை எதிர்பார்க்கும் நபர்களது சிரமத்தை தடுக்கும் வகையில் கலவர தடுப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்திட வேண்டி மனு.


பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் மருத்துவ தேவையை எதிர்பார்க்கும் நபர்களது சிரமத்தை தடுக்கும் வகையில் கலவர தடுப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்திட வேண்டி பெரியகுளம் சார் ஆட்சியர் அவர்களிடம் தென்கரை மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர்கள் கூட்டாக மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியில் உள்ள சார்- ஆட்சியர் அலுவலகத்தில் தென்கரை மற்றும் தாமரைக்குளம் பேருராட்சி தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவற்றில் கடந்த ஏப்ரல் 14/2023 ஆம் தேதி சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தின் காரணமாக தென்கரை பேரூராட்சி மற்றும் தாமரைக்குளம் பேருராட்சி பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. கலவரத்திற்கு காரணமான நபர்களை நாங்கள் கண்டிப்பதோடு, அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம்.



இந்நிலையில் தெ. கள்ளிப்பட்டி மற்றும் தாமரைகுளம் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்காக சென்று வர முடியாத சூழல் உள்ளது. பெரியகுளம் பகுதியில் நிலவிவரும் அசாதாரணமான சூழலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வர போக்குவரத்து வசதியில்லாமல் அவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாத சூழல் உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டும், மேலும் மருத்துவ தேவையை எதிர்பார்த்து பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் பெரியோர்கள், தாய்மார்கள், மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதிலும் போக்குவரத்து வசதி இன்றி மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகின்றது என்றும், பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் மருத்துவ தேவை எதிர்பார்த்து மருத்துவமனைக்கு சென்று வரும் பொதுமக்கள், பெண்கள், மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர்களின் நலன்களை கருத்தில் கொண்டு தெ.கள்ளிப்பட்டி மற்றும் தாமரைகுளம் பகுதிகளில் காவல்துறையினரால் பொது மக்களுக்கு எந்த ஒரு தொந்தரவு இருக்காத வரையில் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை மட்டும் அடையாளம் கண்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும், தென்கரை மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர்கள் என்ற முறையிலும் கோரிக்கை வைத்தனர். 


மேலும் இம்மனு மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் சார்- ஆட்சியர் அவர்களை கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வின்போது தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, பெரியகுளம் மாங்கனி அரிமா சங்க தலைவர் ராமநாதன், தென்கரை பேரூராட்சி 2வது வார்டு கவுன்சிலர் மு.தேவராஜ், 6வது வார்டு செயலாளர் அழகன், 4வது வார்டு முத்து காமாட்சி செந்தில், வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad