தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தாமரைக் குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் ஆள வந்தார் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தாமரைக் குளம் பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குடிநீர் குழாய் சீரமைப்பது,சாலை வசதி தார் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில்பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், வார்டு உறுப்பினர்கள் ஜாகிர் உசேன், பாண்டி, ராஜேந்திரன், முருகன்,மைதிலி, கவிதா, சாந்தி,முனியம்மாள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கான தேவைகள் குறித்து பேசினர். கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என தலைவர் பால்பாண்டி உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment