அன்னையர் தினத்தை முன்னிட்டு தேனி செஸ் அகாடமி சார்பில் 42-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது, இதில் 8 வயது, மற்றும் 14 வயது மாணவர்களுக்கு 14.05.23 இன்று காலை 10 மணி அளவில் தேனி செஸ் அகாடமி வளாகத்தில் அகாடமி செயலாளர் R.மாடசாமி தலைமையிலும், பொருளாளர் S.கணேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வனச்சரகர் (ஒய்வு) S. அமானுல்லா போட்டிகளை துவங்கிவைத்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார், முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்:-
ஜூனியர் பிரிவில்: M. லோகேஷ் சக்தி, J. நித்தின் ராஜ், .D.ஜெய் யாதவ், S.A.கவின் வேதேஸ், M.முகமது இர்பான்
மாணவிகள்: N.மோனிஷா, J.தியாஸ்ரீ, K. கனிஷ்கா.
சீனியர் பிரிவில்: V.தாரணிகாஸ்ரீ, K.கார்த்திக் அக்ஸரன், S.சாய்ரிஷி, V. தருண், P. தஸரதன், N.ராஜாமுகமது, S.P.புவன்சங்கர்
மாணவிகள்: S. பரணி, P.K.தன்யாஸ்ரீ, K.தமன்யா ஆகியோர் வெற்றிபெற்றனர்
No comments:
Post a Comment