பிரதம மந்திரி விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் (PMSBY) புதியதாக இணைவதற்கும், புதுப்பிக்கவும் ரூபாய் 20 பிரீமியம் தொகையை செலுத்தவேண்டும். 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனி நபர்கள் இத்திட்டத்தில் சேரலாம். விபத்தினால் ஏற்படும் இறப்பிற்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்கும் இழப்பீடு உண்டு.
பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தில் (PMJJBY) புதிதாக இணைவதற்கும், புதுப்பிக்கவும் ரூபாய் 436 பிரீமியம் தொகையை செலுத்தவேண்டும். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள தனி நபர்கள் இத்திட்டத்தில் சேரலாம். 55 வயது வரை காப்பீட்டு காலம் நீட்டிக்கப்படும். எந்தவிதமான இறப்பிற்கும் ரூபாய் 2 லட்சம் இழப்பீட்டு தொகையாக இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும்.


இந்த இரண்டு திட்டத்தின் வருடாந்திர பிரீமியம் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி அன்று வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் மூலமாக பிடித்தம் செய்து காப்பீடு புதுப்பிக்கப்படும். எனவே ஏற்கனவே இத்திட்டத்தில் சேர்ந்துள்ள நமது தேனி மாவட்டத்திலுள்ள வாங்கி வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் வருடாந்திர காப்பிட்டு பிரீமியம் தொகையை வரும் ஜூன் 1 ஆம் தேதிக்குள் தங்களது வங்கி கணக்கில் இருப்பு வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த திட்டங்கள் அனைத்து வங்கிகள் மற்றும் தபால் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் மேற்கூறிய காப்பிட்டு திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment