தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள அறம்வளர்த்த நாயகி, கைலாசநாதர் மலைக்கோயிலில் வைகாசி பெளர்ணமியையொட்டி பக்தர்கள்மலையை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். பெளர்ணமியை முன்னிட்டு கைலாசநாதருக்கு பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து உலக அமைதிக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது.


காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்தார்கள் வருகை புரிந்த பக்தர்களுக்கு அரசு ஒப்பந்தகாரர் தொழில் அதிபர் முத்துக்கோவிந்தன் அன்னதானம் வழங்கினார். வி.ப.ஜெ.பசுமை உலகம் நர்சரி சார்பாக மரக்கன்றுகள் இலவசமாக இன்று பக்தர்களுக்கு வழங்கிவந்தார்கள் ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார்குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment