தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் செல்லும் வழியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ்.சரவணகுமார் முன்னிலை வகித்தார்.தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்வில் தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்ராம், பேரூராட்சி துணைத் தலைவர் ராதா ராஜேஷ், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேவராஜ், கைலாசம், முத்து காமாட்சி, அழகுத்தாய், சாந்தி, சிட்டமால், லட்சுமணன், கோமதி, தென்கரை பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர் செயலாளர் முகமது இலியாஸ், துணை செயலாளர் சேதுராமன்,மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment