

இந்நிலையில் கடந்த சில வாரங்களில் திருமாவளவன் சுதாவிடம் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த சுதா திருமாவளவன் சம்பந்தப்பட்ட விவரங்களை சேகரிக்கும் பொழுது அவர் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயத்து வரும் 7-ம் தேதி திருமணம் நடைபெறுவதைஅறிந்த சுதா தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய திருமாவளவன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி தனது வீட்டில் உள்ள மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இது சம்பந்தமாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரிய குளம் காவல்துறையினர் ராஜூ மகன் திருமாவளவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விபரத்தை தெரிந்து கொண்ட ராஜுமகன் திருமாவளவன் இரவோடு இரவாக தலைமறைவு ஆகியுள்ளார் மேலும் பாதிக்கப்பட்ட சுதா தன்னை திருமாவளவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையெனில் எனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என தெரிவித்துள்ளார் அதே சமயம் பெண்ணை ஆசை வார்த்து கூறி பலமுறை தனிமையில் சந்தித்து சுதாவை ஏமாற்றிய திருமாவளவன் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த தகவல் பெரியகுளம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தலைமறைவான ராஜு மகன் திருமாவளவனை பெரியகுளம் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment