இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது, திமுக சார்பில் வேட்பாளராக தேனீ திமுக நகர செயலாளர் நாராயணபாண்டியன் போட்டியிடுகிறார், அவருக்கு திமுக அணியை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணி கட்சியைச் சார்ந்த நகர-பேரூராட்சி உறுப்பினர்கள் திட்ட குழு உறுப்பினராக பெரியகுளத்தில் இருந்து போட்டியிடும் ஓ. சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார் இவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


அனைத்து மக்களிடத்திலும் அன்பாக எளிதில் அணுகி அவருடைய குறைகளை நின்று நிதானமாக கேட்டு அறிந்து பெரியகுளம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டத்தில் மிகத் தெளிவாக எடுத்து கூறி நகரின்வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருவது ஓ. சண்முகசுந்தரம் அவர்களின் கூடுதல் பலம் என அறியப்படுகிறது.
மேலும் அனைத்து கட்சி நண்பர்களிடமும் நல்ல நட்பு பாராட்டி பழகுவதால் இவருக்கு அனைத்து கட்சி நபர்களிடமிருந்தும் ஆதரவு பெருகி உள்ளது அதனால் தேனி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் ஓ. சண்முகசுந்தரத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment