தேனி மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது கவுன்சிலர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 June 2023

தேனி மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது கவுன்சிலர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.


தேனி மாவட்ட  திட்ட குழு  உறுப்பினர்கள் தேர்தல் குழுவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் தான் வாக்காளர்கள் ஆவார்கள். அதன்படி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 10 பேர், நகராட்சி கவுன்சிலர்கள் 176 பேர், பேரூராட்சி கவுன்சிலர்கள் 335 பேர் என மொத்தம் 511 வாக்காளர்கள் உள்ளனர். 

மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில் ஊரக பகுதியில் இருந்து 5 பேரும், நகர பகுதியில் இருந்து 7 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். ஊரக பகுதிக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும், நகர பகுதிக்கு நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களும் போட்டியிடலாம். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடந்தது.


இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் காலை 10 மணி அளவில் தேர்தல் தொடங்கியது, இதில், பூதிப்புரம் பேரூராட்சி வார்டுஎன் 10 ல்அனிதா போடிநாயக்கனூர் நகராட்சி வார்டு எண் 22 இல் கலைவாணி தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு எண் 5 லிருந்து கிருஷ்ணபிரபா தென்கரை பேரூராட்சி வார்டு எண் 1- ல் குமரேசன் தேவதானப்பட்டி பேரூராட்சி வார்டு எண் 8 இருந்து சக்திமுருகன் கம்பம் நகராட்சி வார்டு எண் 26 இல் செந்தில்குமார் போடிநாயக்கனூர் நகராட்சி வார்டு எண் 13 இல்  தனலட்சுமி கூடலூர் நகராட்சி வார்டு எண் 15 தேவதர்ஷினி சின்னமனூர் நகராட்சி வார்டு எண் 3 நயினார் முகமது 'பழனிசெட்டிபட்டி பேரூராட்சி வார்டு எண் 15 ல்பவானி போடிநாயக்கனூர் நகராட்சி வார்டு எண் 12-ல் பிரபாகரன் போடிநாயக்கனூர் நகராட்சி வார்டு எண் 9 -ல்மணிகண்டன் ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டு எண் 10 மீனாட்சி கம்பம் நகராட்சி வார்டு எண் 6 முருகன் தென்கரை பேரூராட்சி வார்டு எண் 9 - ல் ராதா சின்னமனூர் நகராட்சி வார்டு எண் 27 இல் ராஜு போடிநாயக்கனூர் நகராட்சி வார்டு எண் 11 இல் ராஜேஸ்வரி வடுகபட்டி பேரூராட்சி வார்டு எண் 5 பாலாஜி கூடலூர் நகராட்சி வார்டு எண் 9-ல் கலாமணி போடிநாயக்கனூர் நகராட்சி வார்டு எண் 28 கஸ்தூரி சின்னமனூர் நகராட்சி வார்டு எண் 12 கிருஷ்ணவேணி அனுமந்தன் பேரூராட்சி எண். 3-ல்  கோபிநாத் பெரியகுளம் நகராட்சி வார்டு எண் 24-ல் ஓ.சண்முக சுந்தரம்.கோம்பை பேரூராட்சி வார்டு எண் 15-ல் தங்கராஜ் கூடலூர் நகராட்சி வார்டு எண் 21 இல் தினகரன் தென்கரை பேரூராட்சி வார்டு எண் 2-ல் தேவராஜ் தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு எண் 19ல் நாராயண பாண்டியன் பெரியகுளம் நகராட்சி வார்டு எண் 28 பாண்டியராஜன் தேவாரம் பேரூராட்சி வார்டு எண் 13 பிரபு போடிநாயக்கனூர் நகராட்சி வார்டு எண் 2 மரைக்காயர் சேட் உத்தமபாளையம் பேரூராட்சி வார்டு எண் 18 முகமதுஆதம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி வார்டு எண் 9ல்யோகேஸ்வரி போடி மீனாட்சிபுரம் பேரூராட்சி வார்டு எண் 6 ராஜா அனுமந்தன்பட்டி பேரூராட்சி வார்டு எண் ராஜேஸ்வரி அனுமந்தன்பட்டி பேரூராட்சி வார்டு எண் 10-ல் ராஜ்குமார் போடிநாயக்கனூர் நகராட்சி வார்டு எண் 18 ஜெயந்தி ஆகியோர் போட்டியிட்டனர்.


இதில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கு கவுன்சிலர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வந்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குகள் என்னும் பணி தொடங்கியது முதல் திமுக அணியை சேர்ந்த வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் வந்தனர்இறுதியாக தங்கராஜ் - 308, தினகரன் 329, நயினார் - 298, நாராயணன்-324, பவானி - 301, ராஜீவ் - 295, ஜெயந்தி - 308 என்ற கணக்கில் வாக்குகள் பெற்று திமுக அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ். சரவணகுமார். அவர்களிடம் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad