தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் தேனி - கம்பம்-தாலுகாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை தமிழ்நாடு அரசினுடைய உத்தரவின் படி அடைக்கப்பட்டது, அந்த கடையில்பணியாற்றி வந்த டாஸ்மாக் ஊழியர்கள் தற்போது வேலை இழந்து பரிதிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


அதே சமயம் டாஸ்மாக் கடையை மக்களுடைய எதிர்பார்ப்புக்கு இடையே அடைத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் அந்த மதுபான கடையில் பணியாற்றிய ஊழியர்களின் வாழ்வாதாரம் வேலை இழப்பின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த ஊழியர்களுடைய குழந்தைகளின் கல்வி பெருமளவில் கேள்விக்குறியாக உள்ளது அதனால் மதுபான கடை அடைப்பின் மூலமாக வேலை இழந்து தவிக்கும் அரசு மதுபான கடை பணியாளர்களுக்கு வருவாய் துறை அல்லது பொதுப்பணி துறையில் பணி வழங்கிட வேண்டும் என அரசு மதுபான கடை பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்
No comments:
Post a Comment