தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கலைஞரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவுசெய்யும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமை தாங்கினார்.


பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றினார். இந்த நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை இணை இயக்குனர், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம், பெரியகுளம் வட்டார மருத்துவ அலுவலர் கோமதி, ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், சருத்து பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கண்ணையன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள், சரவணன், ஈஸ்வரன், தென்கரை பேரூராட்சி சேர்மன் நாகராஜ், தாமரைக்குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டி, துணைசேர்மன். மலர்க்கொடி சேதுராமன், பணி நியமன குழுத் தலைவர் பாலாமணி பழனி முருகன், பெரியகுளம் நகர துணைச்செயலாளர் எம்.சேதுராமன். வார்டு உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment