இப்பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டும் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டு காலமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளும் ,தனியார் பேருந்துகளும் தினசரி மாலை 7 மணி முதல் புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று வராததால் பேருந்து பயணிகள், பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு இறக்கி விடப்பட்டு, பேருந்து பயணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
மேலும் பெரியகுளத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்து பயணிகள் பஸ் நிலையத்திற்குள் பேருந்து வராததால் மிகவும் சிரமப்பட்டு அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இவற்றை தடுக்கும் பொருட்டு சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சி இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தியும், ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத்தை கைப்பற்றிய நிலையில், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் கண்துடைப்பு நாடகமாக சில நாட்கள் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நின்று பேருந்து நிலையத்திற்குள் சென்று வராத பேருந்துகளை பேருந்து நிலையத்திற்குள் சென்று வர அறிவுறுத்தினர்.


காலப்போக்கில் "பழைய குருடி கதவைத் திறடி" என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது வழக்கம் போல் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று வராமல் இருப்பதன் காரணமாக சிறுவர்களின் விளையாட்டு கூடாரமாக பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் தற்போது காட்சி பொருளாக காணப்பட்டு வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை, திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில், பேருந்துகள் முறையாக பஸ் நிலையத்திற்குள் வராமல் இருப்பதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பேருந்து நிலையத்திற்குள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
ஒன்று, இரண்டு, பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருந்தாலும், இவர்களால் அடிக்கப்பட்டு வரும் பந்துகளால் பேருந்து கண்ணாடிகள் உடைபடும் நிலை உள்ளது .மேலும் பஸ்கள் மட்டுமல்லாது பேருந்து நிலையத்தில் நான்கு சக்கர வாகனங்கள், மற்றும் கனரக வாகனமான லாரி உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.ஆபத்தை உணராத சிறுவர்கள் இங்கு விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 30.06. 2023 பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்தை எடுத்துச் செல்ல இருந்த நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் எதற்காக பேருந்து நிலையத்திற்குள் பேருந்து கொண்டு வருகின்றாய் என்று கேட்டும், நாங்கள் விளையாடுவதற்கு இடையூறாக இருந்தால் "பேருந்தை கொளுத்துவோம்" என்றும் திமிராக கூறி வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருந்து வருகின்றது.
எது எப்படியாயினும் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உரிய வழித்தடங்களில் சென்று , புதிய பேருந்து நிலையத்திற்குள் முறையாக சென்று வந்தால் மட்டுமே இப்ப பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்களும், பேருந்து பயணிகளும், பொதுமக்களும் கூறி வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்திற்குள் காவலர்கள் பணிபுரியாமல் இருப்பதன் காரணமாகவும், ரோந்து பணிமேற்கொள்ளாததன் விளைவாகவும், மேலும் அரசு போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்கள் முறையாக புதிய பேருந்து நிலையத்தில் பணியாற்றதன் விளைவாகவும் சிறுவர்கள் பேருந்து நிலையத்தினை விளையாட்டு கூடாரமாக மாற்றி வருவது வேதனை அளிக்கின்றது என்றும், மாவட்ட காவல் துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிறுவர்களின் விளையாட்டு கூடாரமாக இருந்து வரும் பேருந்து நிலையத்தை மீட்டுக் கொடுக்க வேண்டுமாய் பல்வேறு தரப்பினரி டமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment