தேனி மாவட்டம் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு பெற்ற வீரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ. ஆ ப. அவர்கள் வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

தேனி மாவட்டம் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு பெற்ற வீரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ. ஆ ப. அவர்கள் வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.


தேனி மாவட்டம், மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து  சென்னையில் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா  இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள்,  மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.முருகன் அவர்கள் முன்னிலையில் இன்று (29.06.2023) கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டிகள் கடந்த 08.02.2023 முதல் 24.02.2023 வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர், அரசுஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 5,944 நபர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,442 வீரர், வீராங்கனைகளுக்கு 17.06.2023  அன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


மாநில அளவில்  முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை 30.06.2023 முதல் 25.07.2023 வரை சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்திலிருந்து 512 நபர்கள் தேர்வாகியுள்ளனர். 


நாளை (30.06.2023)  தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் நேரு விளையாட்டு அரங்கில்  நடைபெற உள்ள முதல் பிரிவு விளையாட்டு போட்டிகளுக்கு தேனி மாவட்டத்திலிருந்து தேர்வாகியுள்ள 69 வீரர் வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து புறப்பட்டனர்.


அவர்களில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழத்தில் நடைபெறும் சிலம்பம் விளையாட்டு போட்டியில் 17 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், நேரு விளையாட்டு அரங்கிங்கில் நடைபெறும் கையுந்து பந்து போட்டியில் 26 பள்ளி மாணவர்களும் மற்றும் கபடி போட்டியில் 26 பள்ளி மாணவர்களும் என மொத்தம் 69 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.


அவர்கள் அனைவரையும் சிறப்பாக விளையாட வேண்டும், தேனி மாவட்டத்திற்கு பல்வேறு மாநில அளவிலான வெற்றிகளை பெற்று தர வேண்டும் என வெற்றி பெற வாழ்த்தி  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார்கள்.


இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/-இரண்டாம் பரிசாக ரூ.75,000/- மூன்றாம் பரிசாக 50,000/- மற்றும் இரட்டையர் போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,50,000/- இரண்டாம் பரிசாக  ரூ.  1,12,000/- மூன்றாம் பரிசாக ரூ.75,000/- பரிசுத்தொகையாக வழங்கப்படும். 


கபடி, கூடைப்பந்து, கையுந்துப்பந்து போன்ற குழுப்போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.6,00,000/-இரண்டாம் பரிசாக ரூ. 4,50,000/- மூன்றாம் பரிசாக 3,00,000/-  மற்றும் கால்பந்து, ஹாக்கி போன்ற குழுப்போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.9,00,000/-இரண்டாம் பரிசாக ரூ.  6,75,000/- மூன்றாம் பரிசாக 4,50,000/- பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad