உலக அமைதி, நன்மைக்காக கைலாசநாதர் மலைக்கோயிலில் சிறப்பு ஹோமம் யாகம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

உலக அமைதி, நன்மைக்காக கைலாசநாதர் மலைக்கோயிலில் சிறப்பு ஹோமம் யாகம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 11 பதினொன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம்  29-6-2023 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணிவரை நடந்தது காலை 8.30 மணியளவில்   சிறப்பு  ஹோமம் யாகம் வளர்த்து உலக அமைதி, நன்மைக்காக செய்தார்கள் கைலாசநாதருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் ஒன்பது வகையான அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது அதிக பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள் வருகை தந்த பக்தர்களுக்கு குழுவின் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.


சிறப்பான ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்து இருந்தனர் கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆனி மாதம் பெளர்ணமி கிரிவலம் 02/07/2023 ஞாயிற்றுகிழமை இரவு கிரிவலமும்  அன்னதானமும் நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Top Ad