தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை தேர்வு நிலை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் துணைத் தலைவர் ராதா, பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் குமரேசன், தேவராஜ், முருகாயி, முத்து காமாட்சி, மகேஸ்வரி, அழகுத்தாய், அனிதா,பூசாரி கருப்பன்,சாந்தி, சிட்டம்மாள், கைலாசம்,லட்சுமணன், கோமதி மற்றும் பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் தென்கரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 2 பதினைந்தாவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் பெண்கள் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது அங்குள்ள இலவம் மரங்கள் இடையூறாக இருப்பதை அகற்றுவது உள்ளிட்ட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.
No comments:
Post a Comment