விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் தமிழக முழுவதும் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார்.அதன் அடிப்படையில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளராக ரபீக், மண்டல செயலாளராக தமிழ்வாணன், மேற்கு மாவட்ட செயலாளராக மதன், ஆகியோர்களை அறிவிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து தென்கரை வைகை அணைச்சாலையில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நகரச் செயலாளர் ஜோதிமுருகன், தமிழ் பாண்டியன், தளபதி, ஆண்டவர், கோமதி, பாஸ்கரன், மது, சேகுவேரா, பஞ்சவர்ணம், பிரேம்குமார், தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் நகர் ஒன்றிய நிர்வாகிகள் தாய்மண் ஆட்டோ சங்க பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment