தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகபெரியகுளத்தில் உள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அலுவலகம் முன்பாக பெரியகுளம் தேனி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கீழவடகரை ஊராட்சி துணைத்தலைவர். ராஜசேகர் - தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணைத்தலைவர் குணமுத்து இ.புதுக்கோட்டை கிளைச் செயலாளர் ரஞ்சித்-அரிசிக்கடை முத்து. 12 வது வார்டு செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்ட மிலானி என்பவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனால் தேனி பெரியகுளம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது, தகவல் அறிந்து விரைந்து வந்த தென்கரை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் அணி மக்களவை உறுப்பினர் O.P ரவிந்தர்நாத்ஆதரவு தொண்டர்களை அப்புறப்படுத்தினார். அதன் பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment