காவலர்கள் லீவு கேட்டால் கொடுங்க டி.ஜி.பி உத்தரவு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 July 2023

காவலர்கள் லீவு கேட்டால் கொடுங்க டி.ஜி.பி உத்தரவு.


உரிய காரணத்தோடு காவல்துறையினர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்றைய தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக உயரதிகாரிகள் கூறியுள்ளனர். 2009 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ள விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு பணிப்புரிந்து வந்துள்ளார்.


கடந்த சில நாட்களாகவே டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததால் உயரதிகாரிகள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விஜயகுமாருடன் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதனிடையே விஜயகுமாரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான தேனியில் நேற்று நடைபெற்றது. அதில் டிஜிபி சங்கர் ஜிவால், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதனையடுத்து மதுரை சரகத்திற்கு உட்பட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். 


அப்போது காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்த பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உரிய காரணத்தோடு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் 

No comments:

Post a Comment

Post Top Ad