நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் மன்றத்தில் தீர்வு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 July 2023

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் மன்றத்தில் தீர்வு வழங்கப்பட்டது.


2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு  சிறப்பு மக்கள் நீதிமன்றம்  நடத்த வேண்டும் என மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு  உத்தரவிட்டதன் பேரில் இன்று(08.07.2023) தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.


தேனி மாவட்ட முதன்மை நீதியரசர் திரு சி.சஞ்சய் பாபா அவர்கள் தலைமையிலும் குடும்ப நல நீதிமன்ற நீதியரசர் திரு.பி.சரவணன் அவர்கள் முன்னிலையில் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 நில ஆர்ஜித வழக்குகளும் 4 மோட்டார் வாகன வழக்குகளும் என மொத்தம் 9  வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 


அதில் 4  மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.75 இலட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது. 


இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு வழக்கறிஞர் திரு.எ.கருணாநிதி மற்றும் பிற வழக்கறிஞர்கள், சட்டப்பணிகள் ஆணையக்குழு அலுவலர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad