மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 July 2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (10.07.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் திருமதி சாந்தி (ச.பா.தி) மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களின்  திறனை மேம்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட, கவிதை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.7,000/- மூன்றாம் பரிசாக ரூ.5000/-க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலமாக தேனி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் ஈடுபடுவதற்காக 300 தன்னார்வலர்களுக்கு பேரிடர்களை கையாள்வது குறித்த ஆப்த மித்ரா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பேரிடர் கால நண்பன் (ஆப்த மித்ரா) என்ற சிறப்பு பயிற்சி  பெற்ற தன்னார்வலர்களுக்கு அவசர காலங்களில்  பயன்படுத்தக்கூடிய  (Emergency Responder kit) ரூபாய் 9000/- மதிப்பிலான  அவசர கால உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட 280 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.


முன்னதாக, சமூக பாதுகாப்பு துறையின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,  2 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள்  வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad