தேனி மாவட்டம் உழவர் சந்தைகளில் வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 July 2023

தேனி மாவட்டம் உழவர் சந்தைகளில் வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை.


தேனி மாவட்டம் உழவர்  சந்தைகளில்  வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.வி ஷஜீவனா அவர்கள்  தகவல்.

தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளி சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.வி. ஷஜீவனா.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, வெளி சந்தைகளில் தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகளான தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய உழவர் சந்தைகளிலும், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் டான்ஹோடா விற்பனை மையத்திலும், நடமாடும் காய்கறி வண்டிகளிலும் நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  ஏற்படுத்திய இந்த வாய்ப்பினை  பயன்படுத்தி  குறைந்த விலைக்கு தக்காளி பெற்று கொள்ளுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad