இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி மாவட்டத்தில் ரூபாய் 3.51 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகமாக மாவட்ட பதிவாளர் அலுவலகம் நிர்வாகம் மற்றும் தணிக்கை துறை அலுவலகம், பெரியகுளம் இணை 1சார் பதிவாளர் அலுவலகம், மற்றும் தேனி சார்பதிவாளர் அலுவலகம் என 4 அலுவலகங்களை கொண்டு ஒருங்கிணைந்த அலுவலகமாக காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
இவை பெரியகுளம் பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. பெரியகுளம் பகுதி மக்களுக்கு தெரியாமல் இரவோடு இரவாக இங்கு செயல்பட்டு வந்த பதிவுத் துறை அலுவலகங்கள் மாற்றப்பட்டது இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரியகுளம் இணை 1 சார்பதிவாளர் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இவர்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள தற்போது 15 கிலோ மீட்டர் கடந்து தேனிக்கு சென்று வரக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு சென்று வருவதனால் பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள், மற்றும் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பெரியகுளம் பகுதியிலேயே பெரியகுளம் இணை1 சார் பதிவாளர் அலுவலகம் செயல் பட்டிட ஆவண செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் பெரியகுளம் பகுதிக்கு பெரியகுளம் இணை 1சார் பதிவாளர் அலுவலகத்தை கொண்டுவர வேண்டுமாய் தாங்களை பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் கோரிக்கையாகவும் வைத்து இவற்றை விரைந்து செயல்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment