காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு கர்நாடகா அரசை கண்டித்தும், தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக உறுதி அளித்து தற்பொழுது தகுதியுள்ள குடும்பத் தலைவிக்கு வழங்கப்படும் என்ற அரசு உத்தரவை கண்டித்தும்,தமிழகம் முழுவதும் மணல் கல்குவாரிகளில் செயல்பாட்டில் ஊழல் மடிந்து கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதை கண்டித்தும், அங்கன்வாடி மையங்கள் போதுமான அடிப்படை வசதி வேண்டி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இன்றி செயல்பட்டு வருவதை கண்டித்து, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் இதனால் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக கூறியும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நகரத் தலைவர் முத்துப்பாண்டி, மோடி சஞ்சீவி, கடல் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
No comments:
Post a Comment