தேனி மாவட்டத்தில் ஓராண்டிற்கும் மேலாக முழு நேரமாக பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு பி.ஆர்.ஓ. அரசு சலுகைகள், பத்திரிகையாளர் பஸ் பாஸ், நல வாரிய அடையாள அடையாள அட்டை வழங்காமல் அலைக்கழிப்பு, கண்டுகொள்ளாத தேனி மாவட்ட கலெக்டர்!
தேனியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் ஏ பி ஆர் ஓ ஆக மகா கிருஷ்ணன் மற்றும் செய்து துறை இணை இயக்குனர் அண்ணாவின் தம்பி பி.ஆர்.ஓ.வாக நல்ல தம்பி இருந்து வருகிறார். அண்ணன் தயவில் இருப்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று தேனி மாவட்டத்திற்கு பி.ஆர்.ஓ. செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிய வரலாற்றிலேயே பிஆர்ஓ வந்த உடனே அலுவலகத்தை அதிரடியாக இடித்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். நீண்ட காலம் பிஆர்ஒ ஓட்டுனராக இருந்தவரை மாற்றிவிட்டு தனது சொந்தக்காரரை ஓட்டுனராக பணி நியமனம் செய்துள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தனியார் கல்லூரிகளில் நடத்து பல்வேறு முறைகேடு செய்து வருகிறார். பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதிலும் குறிப்பாக பஸ் பாஸ் மற்றும் பத்திரிகையாளர் நல வாரிய அடையாள அட்டை வழங்குவதிலும் முறைகேடு செய்து வருகிறார். தேனி மாவட்ட செய்தியாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர் ஆவார்.
செய்தியாளர்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் செய்தியாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத பி.ஆர்.ஓ. வாக செயல்படுகிறார். அவருக்கு பிடித்த பெரிய தொலைக்காட்சி, பெரிய செய்தி நிறுவனங்கள் என பெரிய நிறுவனத்தினரிடம் பேசுவது RNI பெற்ற இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்களை லோக்கல் பேப்பர் என சிறிய நாளிதழ் நிறுவனர்களிடம் யாரிடமும் சரியாக உரையாடுவதுமில்லை, அருகில் போய் வணக்கம் வைத்தாலும் ம்... வணக்கம் என சொல்லிக் கொள்ளும் வகையில் செய்தியாளர்களை மதிப்பதில்லை இந்த பிஆர்ஓ என செய்தியாளர்களின் மனக்குமுறலாக உள்ளது.
உண்மை செய்திகளை வெளியிட சுதந்திரமாக செய்தி எழுத விடுவதில்லை என்பதும் அப்படி உண்மை, செய்தியை சுதந்திரமாக வெளியிட்டாலோ அல்லது போட்டோ வீடியோ எடுத்து செய்தியாக வெளியிட்டாலோ உடனடியாக பல மிரட்டல்கள் வருகிறது என மாவட்ட செய்தியாளர்கள், மாவட்ட புகைப்படக் கலைஞர்கள் குறையாய் சொல்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களுக்கு பஸ் பாஸ், பத்திரிக்கையாளர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் தனது நிறுவனத்தில் இருந்து டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதம் என செய்தி நிறுவனத்தின் ஆசிரியரிடமிருந்து ஓராண்டிற்கான கடிதம் வாங்கி வந்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டது.
கடிதம் கொடுத்தும் கடந்த 7 மாதமாக தேனி மாவட்டத்தில் பஸ் பாஸ் மற்றும் நல வாரிய அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ், மாத இதழ், வார இதழோ PRO அலுவலகத்தில் இதழ் கொடுத்தால் பதிவேட்டில் சரிவர பதிவு செய்வதுமில்லை, ஏதேனும் சந்தேகம் அல்லது சலுகையை பற்றி கேட்கும் போது உங்கள் நாளிதழ் வருகிறதா..? என எப்பொழுதும் கேட்பதே இவருடைய வேலையாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து தினமும் பி.ஆர்.ஓ. மற்றும் கலெக்டர் செய்தியை தினம் தினம் ஒரு செய்தி தவறாமல் வெளியிடும் செய்தியாளர்களையும், புகைப்பட கலைஞர்களையும் ஆதரிப்பதே இல்லை, மதிப்பதே இல்லை, இவருக்கு அமைச்சர்கள், தனது அண்ணன் செல்வாக்கு அதிகமாம். இந்த காரணத்தால் தான் இவர் இஷ்டப்படி ஆடுகிறார் என தெரிவிக்கின்றனர்.
ஒரு மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி... ஆனால் செய்தியாளர்களுக்கு இந்த நிலை என்றால் சாமானியனின் நிலை என்ன..? மதிக்காதது என்பது மிகப் பெரிய வருத்தமாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். அரசு நல திட்டம் வாங்குவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து செய்தியாளர்களின் உரிமையை முடக்கி வைப்பது என்பது மிகப்பெரிய தவறு, அரசு அறிவித்துள்ள சலுகைகளை தருவதே இல்லை தந்தால் தானே அந்த அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நலத்திட்ட அட்டைக்கு பதிவு செய்ய முடியும் இதெல்லாம் தராமலே பிஆர்ஓ செய்திகளை போடும் செய்தியாளர்களை ஏமாற்றி அலைகழித்து வருகிறார் என பாதிக்கப்பட்ட அனைத்து செய்தியாளர்களின் மனக்குமுறலாக உள்ளது.
இதைப் பற்றி ஏதேனும் பணிந்து அணுகினாலும் பார்க்கலாம்.. பார்க்கலாம்... எனக் கூறுவதும் உரிய பதில் தருவதில்லை ஏதேனும் கேட்டுவிட்டால் அவர்கள் மீது குறி வைத்து ஒரு சிலரை வைத்துக்கொண்டு மிரட்டுவதும், ஏதேனும் தவறாக சித்தரித்து பத்திரிகை நிறுவன ஆசிரியரிடம் புகார் தெரிவிப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். இதற்குத்தான் அரசு ஊதியம் தருகிறதா எனவும் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியரும் ஏன் கண்டு கொள்வதில்லை என்பதும் தெரியவில்லை, ஏதேனும் நிகழ்ச்சி என்றால் 20 நிமிடமோ அல்லது அரை மணி நேரத்திற்குள்ளோ திடீரென தகவல் தருவது குறிப்பிட்ட செய்தியாளர்களுக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தகவல் கைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தருவது, செய்தியாளர்களை தரம் பிரித்துப் பார்ப்பது போன்ற செயல்களில் சிறந்தவராக விளங்குகிறார்.
ஏதேனும் நிகழ்ச்சி என்றால் அந்த நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் வந்துவிட்டால் உங்களுக்கெல்லாம் யாரு தகவல் கொடுக்கிறார்கள் ஊருக்குமுன்ன உங்களை யார் வர சொன்னது என முகத்தில் அடித்தார் போல் பேசி செய்தியாளர்களை அனைவரின் முன்பு அவமானப்படுத்தும், அரசு தொடர்பான விவரங்களை துறை சார்ந்த நிகழ்ச்சி குறித்த மாவட்ட அதிகாரிகளிடம் உரையாடி கைபேசி எண் பெற்று விவரங்களை தெரிந்து கொண்டு செய்தி சேகரிக்கும் போது உரையாட அனுமதிப்பதில்லை. இது போன்று பல அவல நிலையும் தலைவிரித்தாடுகிறது இந்த தேனி மாவட்டத்தில் என கூறுகின்றனர்.
இதுவரை ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் பெருமளவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சக்சஸ் ஸ்டோரிகள் தினமும் மாவட்ட ஆட்சியர் செய்திகள் முழுவதுமாக வழங்கும் நாளிதழ்கள் அதிகபட்ச செய்தியாளர்களுக்கும் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஸ்டிக்கர்கள் வழங்கப்படவில்லை, நலதிட்ட கார்டும் வழங்கவில்லை, இலவச பேருந்து பயண அட்டை மற்றும் அரசு அடையாள அட்டை வழங்கப்படவில்லை எதையும் கண்டு கொள்வதே இல்லை என கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
அவருக்கு பிரியப்பட்ட செய்தியாளர்களை மட்டும் காரில் அழைத்துச் சென்று சக்சஸ் ஸ்டோரி மற்றும் புகைப்பட கண்காட்சியை அமைப்பது செய்தி சேகரிப்பது என ஒரு சில செய்தியாளர்களை மட்டும் காரில் அழைத்துச் செல்வதும் மற்ற செய்தியாளர்களை புறக்கணிப்பதும் தொடர்ச்சியாக செய்து வருகிறார் என தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுகள், மாசுகள் மற்றும் கல் குவாரிகள் என பல இடங்களில் வசூல் வேட்டைகளிலும் கைகோர்த்துக்கொண்டு பல லஞ்ச லாவண்ய முறைகேடுகள் தெரிந்தும் தெரியாததும் போல் பல இடங்களில் வசூல் வேட்டையில் மாமன்னராக செயல்படுகிறார் எனவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள செய்தியாளர்களுக்கான அனைத்து அரசு சலுகையும் அவ்வப்போது இந்த ஆண்டாவது கிடைக்கும் என எதிர்பார்க்கும் தமிழக அரசு வழங்கும் இலவச பேருந்து பயண அட்டை, அரசு நலத்திட்ட அட்டை தருகிறேன்.. தருகிறேன்... என்று அலையவிட்டு ஏமாற்றி வருகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரிந்த உண்மை என தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்ட பி.ஆர்.ஒ. நல்ல தம்பி மதிப்பவர்களை அவர் மிதிக்கின்றார். பெரிய நிறுவனம் என அவரை மிதிப்பவர்களை இவர் பி.ஆர்.ஒ. நல்லதம்பி மதிக்கின்றார் என்பதும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அரசு விளம்பரங்கள் அவருக்கு பிரியமானவர்களுக்கு மட்டும் தருவது வழக்கமாக வைத்துள்ளார். RNI பெற்ற இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல நாளிதழ்களுக்கு, விளம்பரம் தர அணுகினால் விளம்பரங்கள் கொடுக்க முடியாது என கராராக பேசி அவமானப்படுத்தி அனுப்புகிறார் எனவும் தெரிவிக்கின்றனர்.
அனைத்திற்கும் வழிகாட்டியும், மாவட்ட தலைவராகவும் முழுமையாக கண்காணிக்க கூடிய தேனி மாவட்ட ஆட்சியர் இதைப்பற்றி தெரிந்தும் தெரியாதது போல் இருப்பது செய்தியாளர்களின் மனக்குமுறல்களை மற்றும் செய்தியாளர்களின் நிலைமையை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளாத நிலையை நினைத்தால் மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் செயதியாளர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களுக்கு எந்த நிலை இருக்கும் என்று யோசித்துப் பார்... என மாவட்ட அளவிலான செய்தியாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். தமிழக அரசும் செய்தியாளர்களுக்கு பல நல திட்டங்களை அறிமுகப்படுத்தி உண்மை செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களை ஊக்குவித்து வரும் இந்த வேலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும் கண்டிக்கத்தக்கது, சென்னையில் உள்ள அரசு தலைமை செயலகத்தில் செயல்படும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோருக்கும் இச்செய்தியானது சமர்ப்பணம் உடனடியாக செய்தியாளர்களுக்கு அரசு வழங்கிய அனைத்து
சலுகைகளையும் வழங்க தமிழக அரசும் தலைமைச் செயலக இயக்குனரும், துணை இயக்குனரும் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சலுகை சலுகைகளை வழங்க ஆவணம் செய்யுமாறும் இது போன்று சுயநலமாக அரசு நல திட்டங்களை வழங்காமல் சுயநலமாக நடத்துவதும் செய்தியாளர்களை அலைக்கழிப்பதும், அரசு சலுகையை தராமல் ஏமாற்றி செயல்படும் இவர்கள் மீது தமிழக அரசு உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும். மாவட்டத்தில் முழு நேரமாக பணியாற்றி உண்மை செய்திகளை வெளியிட்டு தினமும் மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டு செயலாற்றி வரும் அனைத்து செய்தியாளர்களுக்கும் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து சலுகைகளும் செய்தியாளர்களுக்கான உரிமைகளும் உரிய நேரத்தில் கிடைத்திட தமிழக அரசு, செய்தித்துறை இயக்குனர், துணை இயக்குனர், செய்தித் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட செய்தியாளர்களின் கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றிட வேண்டும் என்று இச் செய்தி வாயிலாக கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment