முதியோர் இல்லத்தை சவால்களுக்கு மத்தியில் பராமரித்து வரும் வீரமங்கை - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 July 2023

முதியோர் இல்லத்தை சவால்களுக்கு மத்தியில் பராமரித்து வரும் வீரமங்கை


முதியோர் இல்லத்தை சவால்களுக்கு மத்தியில் பராமரித்து வரும் வீரமங்கையாக நிர்மலா சாய் விளங்கி வருகிறார். அவர் தேனியில் கூறியதாவது :- சென்னை குன்றத்தூரில் இயங்கி வரும் வரும் சாய் முதியோர் இல்லம் கடந்த 20-02-2013 ஆம் ஆண்டு சுவாமி ராமகிருஷ்ணா பரமஹம்சர் பிறந்த நினைவாக துவக்கப்பட்டது தான் சாய் முதியோர் இல்லம். பல ஆதரவற்று இல்லாமல் இருக்கின்ற ரோட்டோரங்களில் வசிக்கின்ற தன் நிலை மறந்து வாழும்  முதியோர்களை அழைத்து வந்து முறையான முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று  பராமரித்து இன்று வரை நடத்திக் கொண்டிருக்கும் திருமதி நிர்மலா சாய்.

இவருக்கு தாய் தகப்பன் இல்லை அவர்களின் நினைவாக இல்லத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் தனது தாய் தந்தையாக பாவித்து பார்த்து வருகிறார்கள். இது ஒரு வாடகை தளம்,பல போராட்டங்கள் எதிர்ப்புகளையும் தாண்டி சேவை மட்டுமே கருத்தில் வைத்து பல அவமானங்களை மேற்கொண்டு தன்னிச்சையாக இந்த முதியோர் இல்லத்தை பராமரித்து வருகிறார்கள். 


இந்த இல்லத்திலேயே 24 மணி நேரமும் சேவை செய்து கொண்டிருக்கும் இவர். ஒரு வீரப் பெண் என்றும் சொல்லலாம், கேளிக்கை கிண்டலுக்கு மீறி ஒரு தனி ஒரு பெண் எப்படி நடத்துவாய் என்பதற்கு போராட்டமாக சாதனை பெண்ணாக திகழும் இப்ப பெண்மணியை எப்படி கூறலாம். பல மனிதர்கள் இவர்களின் சேவையை பாராட்டியும் தூற்றியும் ஏளனம் செய்தும் அதைப் பற்றி சிறிதும் மனதில் அச்சம் கொள்ளாமல் என் சேவை நான் செய்வேன் என்று மூச்சாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்மணி பல மேடைகளில் பாராட்டும் புகழும் பெற்றும் மிக சாதாரண நிலையில் இவ் இல்லத்தில் தானும் ஒரு படி பெண்ணாகவும் ஒரு மகளாகவும் தன் உறவுகளை விட்டு சேவை நோக்கத்தோடு மட்டும் இவ் இல்லத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரி கள், நன்கொடையாளர்கள் வந்து சென்று இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களை எப்படி வழி நடத்தி செல்கிறீர்கள் கேட்டு அறிந்து பாராட்டி விட்டு செல்கிறார்கள். இந்த வீரமங்கையின் சேவையினை நாம் பாராட்டுவோமாக..

No comments:

Post a Comment

Post Top Ad