சில்வார்பட்டியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 July 2023

சில்வார்பட்டியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக கிளைச் செயலாளர்கள் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கியது.

கிரிக்கெட் போட்டியினை  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் சரவணகுமார் துவக்கி வைத்தார். திமுக  வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டியன், ஊராட்சி  ஒன்றிய பெருந்தலைவர் தங்கவேல், பெரியகுளம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடாசலம், கெங்குவார்பட்டி பேரூர் கழகச் செயலாளர் தமிழன் ,வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம்,சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மீனவர் அணி முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி முருகன், மாவட்ட விவசாயி தொழிலாளர் துணை டி .பரமசிவம், ஸ்டுடியோ ரமேஷ் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட பொறியாளர் அணி  துணை  அமைப்பாளர் ராம்ஜி, உதயராயேஸ்வரன், முருகபாண்டி மற்றும் சில்வார்பட்டி ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவருக்கு சில்வார்பட்டி  கிளைக் கழகம் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை தொடர்ந்து.பெரியகுளம் எம்எல்ஏ பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியனும் இணைந்து பேட்டிங் செய்து போட்டியினை துவக்கி வைத்தனர்.  வெற்றி பெற்ற அணியினருக்கு  முதல் பரிசாக 15000,  இரண்டாம் பரிசாக 10000, மூன்றாம் பரிசாக  5000 வருகின்ற 30.7.23 ம் தேதி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள்  கலந்து கொள்வதாக   தகவல் தெரிவித்துள்ளனர் . 

No comments:

Post a Comment

Post Top Ad