இன்று தேனி மக்களவை உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய மூத்த மகன் பி .ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தேனி பகுதியில் உள்ள வாக்காளர் மிலானி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அதிரடியாக நீதிமன்றம்தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து பெரிய குளத்தில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் இருந்து போடி இல்லத்திற்கு செல்லும் பொழுது பெரியகுளத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் செய்தியாளர்கள் முன்பு ரவீந்திரநாத் வழக்கு சம்பந்தமாக மேலவை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment