தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் பேரூராட்சி தலைவர் நாகராஜ் வழிகாட்டுதலின் படி 2வது வார்டு கவுன்சிலர் மு.தேவராஜ் தலைமையில் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம் மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனைகள் செய்யப்பட்டு, காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இலவச மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டது. இம்முகாமில் மருத்துவர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் அரவிந்த், சுகாதார செவிலியர் விஜயகுமாரி, மருத்துவ பணியாளர் கார்த்திகா, பரப்புரையாளர் பூமணி, கெளசல்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
தென்கரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் பலரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment