தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரைப் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் அக்.31-ல் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் துணைத் தலைவர் ராதா ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் குமரேசன் ,தேவராஜ், முருகாயி, முத்துகாமாட்சி, மகேஸ்வரி, அழகுத்தாய், பூசாரி கருப்பன், சாந்தி, சிட்டம்மாள், கைலாசம், லட்சுமணன், கோமதி மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தென்கரைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
.மேலும் பொது குடிநீர்குழாய் அமைத்தல், சாலை வசதி அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment