தாமரைக்குளம் பேரூராட்சியில் தலைவர் பால்பாண்டி தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2023

தாமரைக்குளம் பேரூராட்சியில் தலைவர் பால்பாண்டி தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேவுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வசந்தா, கோமதி, முருகன், பாண்டி, மைதிலி, சாந்தி, ராஜேந்திரன், ஜாகிர் உசேன், கவிதா, பாலாமணி, தேவகி, முத்துலட்சுமி, முனியம்மாள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர். தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது விநியோக கட்டிடம் கட்டுதல், சிறு மின்விசை பம்பு அமைத்தல், மினி உயர் கோபுர விளக்கு அமைத்தல் உள்ளிட்ட மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

No comments:

Post a Comment

Post Top Ad