பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் பொதுமக்கள் அத்துமீறி நுழைந்துகடும் வாக்குவாதம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 January 2024

பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் பொதுமக்கள் அத்துமீறி நுழைந்துகடும் வாக்குவாதம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது, கூட்டம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் இருந்தே நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்று தொடர் குற்றச்சாட்டுகளை மன்றத்தில் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் சுதா நாகலிங்கம் வார்டில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த நந்தகுமார் தலைமையிலான பொதுமக்கள் திடீர் என மன்றத்துக்குள் புகுந்து நார்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர்மன்றமே கலோபரமாக மாறியது.


பாரம்பரியமான 100 ஆண்டுகளை கடந்த நகர்மன்றத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றது இல்லை என பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தென்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நகர்மன்ற கூட்ட அரங்கிற்க்கு காவல் ஆய்வாளர் ஜோதிபாசு தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது


தொடர்ந்து நார்மன்றத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் வார்டுகளில் பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் அதிர்ப்தியில் உள்ளதாக குற்றசாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad