குல்லாபோட்ட இந்து அதிமுகவில் நடக்கும் நாடகம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 February 2024

குல்லாபோட்ட இந்து அதிமுகவில் நடக்கும் நாடகம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சி செயலாளர் மனோகரன் தலைமைக்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மூன்று இஸ்லாமியர்கள் ஐந்து இந்து இளைஞர்கள் என எட்டு நபர்களை முஸ்லிம்கள் அதிமுகவில் இணைந்து வருவதாக  விதமாக மாயதோற்றத்தை உருவாக்கும்விதமாக இளைஞர்களை தயார் செய்து அதிமுக மாவட்ட பொறுப்பாளர் முருக்கு கோடை ராமர் அலுவலகத்திற்கு சென்று இணைத்துள்ளார்.


மேலும் இது சம்பந்தமான செய்தி சமூக வலைதளத்தில் வரும் பொழுது அட இது என்ன கூத்து அந்த எட்டு இஸ்லாமியர்கள் என்று சொல்லக்கூடிய நபர்களில் இன்பரசன் - மணி- ஜெகநாதன். தனசேகரன் - ஜப்பான் ஆகிய 5 இந்து இளைஞர்களை இஸ்லாமியர்கள் என ஆள்மாறாட்டம் செய்து தாமரைகுளம் பேரூர் செயலாளர் மனோகரன் திட்டமிட்டு அதிமுகவில் இணைந்துள்ளார்என்று பரபரப்பாக பேசி வருகின்றார்கள். இதேபோல தொடர்ந்து அதிமுக-வின் இணைப்பு நாடகம் நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்குகளை பிரிக்க வே நடைபெறுகிறது என்று பொதுமக்களிடயே அதிமுக மீது அதிர்ப்தியை உண்டாக்கி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad