தேனி மாவட்டம் தேனிபங்களாமேடு பகுதியில் உரிமையை மீட்க்க ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 19 February 2024

தேனி மாவட்டம் தேனிபங்களாமேடு பகுதியில் உரிமையை மீட்க்க ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


தேனி மாவட்டம் தேனிபங்களாமேடு பகுதியில் உரிமையை மீட்க்க ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்த பொதுக்கூட்டத்தில் ஊரகவளர்ச்சிதுறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த பொதுக்கூட்டம் தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் உசிலம்பட்டி கம்பம் போடி ஆண்டிபட்டி பெரியகுளம் ஆகிய சட்டமன்றத்தின்தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது .


இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க, தமிழ்ச்செல்வன், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே. எஸ். சரவணக்குமார் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர். தேர்தல் பொறுப்பாளர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் பிரதமர் என்றும் ஒன்றியத்தில் ஆளக்கூடிய பாஜக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிவாரணத் தொகைஒரு பைசா கூட தரவில்லை எனவும் தமிழகத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு செல்லக்கூடிய பெரும் அளவு ஜிஎஸ்டி வரியிலிருந்து குறைந்து அளவுதொகை மீண்டும் தமிழகத்திற்கு திருப்பித் தரப்படுகிறது 


மேலும் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டு தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவத் தொகை எதுவும் தராமல் வஞ்சித்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார்


தேனியில் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதால் தேனி பங்களா மேடு பகுதியே மனித தலைகளாகவே காட்சியளித்தது .

No comments:

Post a Comment

Post Top Ad