கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி 22 ஆம் ஆண்டு விழா துவக்கம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 4 March 2024

கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி 22 ஆம் ஆண்டு விழா துவக்கம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வருகின்ற  8/3/2024 வெள்ளிக்கிழமை மாலை4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடும் இரவு  8 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மகாசிவராத்திரி நான்கு கால பூஜை வழிபாடு முதல் கால பூஜை இரவு10 மணி இரண்டாம் கால பூஜை இரவு 12 மணி மூன்றாம் கால பூஜை  இரவு 2மணி  நான்காம் கால பூஜை பிரம்ம முகூர்த்தம் பூஜை 4 நான்கு மணியளவில் நடைபெற இருக்கின்றது.   

சித்தர்கள், ரிஷிகளும் கைலாசநாதர் மலையை சுற்றி  சூட்சமமாக வந்து கைலாசநாதரை  வழிபடுகிறார்கள் என்று சான்றோர்கள் கூறுகிறார்கள்.  இந்த வருடம் 2024 அபூர்வமான மகாசிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவயோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம் மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோகவேளையும் கூடி வருகின்றன. இந்த இனிய சிவராத்திரியில், கூட்டு வழிபாடும், தேவாரம், திருவாசகம், பாடி இறைவனை போற்றி வழிபடும்  நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது திருவண்ணாமலை  அருளால் கைலாசநாதர் மலைக்கோயிலில் 2001-ல் மாசி மாதம் பெளர்ணமி கிரிவலம் ஒன்பது பக்தர்களால் பாதையை இல்லாத போது மலையை சுற்றி  கிரிவலம்  வந்து தரிசனம் செய்த இந்த மலை இன்று பல்லாயிரம் பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்கின்றார்கள். 


கிரிவலம் எப்படி துவங்கியது? ஒருபக்தனின் நல்ல எண்ணத்தின் வேண்டுதலை  நிறைவேற்றியவர் கைலாசநாதர்.  கைலாசநாதர்பக்தன் 2000 - ல் சித்திரை மாதம் திருவண்ணாமலை கோயிலுக்கு பெளர்ணமி கிரிவலம் செல்ல, சென்றவர் பகலில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள "ரமணர் மகரிஷி "ஜீவ சமாதி கோயிலில் தரிசனம் செய்து விட்டு தீபம் ஏற்று இடத்திற்கு மேலே செல்ல போகும்போது வயது முதிர்ந்த சாமியார் நானும் வருகிறேன் என்று சொல்ல இருவரும் மேல சென்று தீபம் ஏற்று இடத்தை அடைந்து அங்கே அமர்ந்து இருக்கும் போது பக்தன் சாமியார் அவர்களிடம் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பழைமையான கைலாசநாதர் மலைக்கோயில் உள்ளது திருவண்ணாமலை கிரிவலம் போல எங்கள் பகுதியில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலிலும் கிரிவலம் செல்ல வேண்டும், அதிகபக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டும், நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்னையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்று பக்தன் சாமியாரிடம் சொல்ல சாமியார், பக்தனை பார்த்து உன் சூழ்நிலையும் உன் குடும்பத்தின் நிலைமைகளைபற்றியும் சொல்லாமல் கோயிலை பற்றிய சொல்கிறாய் கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னார் தாங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்று பக்தன் கேட்க அதோ தெரிகிறதே பர்வத மலை அங்கே இருந்து வருகிறேன் என்று சாமியார் சொன்னார். 


இப்போது திருவண்ணாமலை  கோயில் பெளர்ணமி கிரிவலத்திற்கு அடுத்த படியாக கைலாசநாதர் மலைக் கோயிலில் அதிக பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்து வருகின்றார்கள் இந்த காட்சியை பார்த்த பக்தன் "கைலாசநாதரிடம் எப்படி வேண்டுகிறார் நல்லதை எண்ண வைத்து அதையும் நடத்தி வைத்த எம்பெருமானே உன்னை என்ன வென்று அழைப்பேன் அம்மையென்று அழைப் பேனா! அப்பனென்று அழைப்பேனா அருள் புரிவாயா எம்பெருமானே என்று கைலாசநாதர் கோயிலில், மனமுருகிவேண்டி வருகிறார்.


கைலாசநாதர் சிவபெருமான் மீது பக்தி கொண்டு திருவருளை பெற்று திருப்பணி செய்த மாண்புமிகு முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அய்யா அவர்கள் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினரின் கோரிக்கை ,கிராம பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று 2005 -ல் பாலாலயம் செய்து பூமி பூஜை போட்டு திருப்பணி வேலைகளையும் கவனித்து வந்தார் முழு மனதுடன் முழு கோயில் அமைத்து தந்து 2012- ஆனி மாதம் 29/6/2012  வெள்ளிக்கிழமை பூமழை பொழிய இனிதென கும்பாபிஷேகம் செய்தார் அதனோடு கிரிவலபாதை தார்சாலை போட்டு மின் விளக்குகள் அமைத்து பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதிகளையும் அமைத்து தந்துள்ளார். 


பக்தர்களுக்கு குடி தண்ணீர் வசதிகள் செய்து தந்துள்ளார். தொடர்ந்து கோயிலில் ஆகம விதிப்படி பூஜைகள் சிவ வழிபாடு, பிரதோஷம், பெளர்னமி , மகா கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்ச்சிகளையும் தினமும் பூஜை புராணங்கள் நடத்திடவும் அர்ச்சகர்,  ஓதுவார், வாத்தியம், கணக்காளர், இரவு காவலர், தூய்மை பணி செய்து வரும் பணியாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து  கைங்கர்யம்  செய்து வருகின்றார். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. 


கைலாசநாதர் மலைக்கோயில் "கைலாசநாதர் " என்றால் தியான நிலையில் இருப்பவர். பக்தியுடன் தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்களின் எண்ணம் செயல்,மனதை அறிந்து அருள்புரிந்து வருகிறார். பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். மகாசிவராத்திரி விழா அன்று குழுவின் சார்பாக ஐந்து முகம் ருத்ராட்சம் வழங்கபடும். மாலை 7 மணி முதல் அன்னதானமும் பிரசாதமும், சுக்கு மல்லி காபியும் வழங்கபடும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad