தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டிவி.ரெங்கநாதபுரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ கோவிந்தன் அழகாஜி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜை துவங்கி யாக சாலையில் 4 கால பூஜைகள் ஆச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத நடைபெற்றது.
இதையடுத்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவில் கோபுரத்தில் பல புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கும்ப கலசத்தின் மீது ஆச்சாரியர்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர். இதையடுத்து பக்தர்கள் மீது கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment