அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டபப்படிகள் நடைபெற்று, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி பிரகார உலா வந்தார். இந்நிலையில் காலை சுந்தரேஸ்வரர் மீனாட்சி தாயாருக்கு மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முருகன் சன்னதியின் முன்பாக மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கல்யாண கோலத்தில் எழுந்தருளினர் .பின்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் மீனாட்சி தாயாருக்கு மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மூலமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாலை மாற்று வைபவமும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி திருமண நிகழ்ச்சியை கண்டு களித்தனர் .அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மேல் அச்சதை தெளிக்கப்பட்டது. திருமண தம்பதிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனை அடுத்து பெண்கள் மாங்கல்யத்தை மாற்றி அம்மன் பிரசாத கயிறை கட்டிக்கொண்டனர்.
அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹரிஷ் குமார் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment