தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் 90% பேர் விவசாயிகளாகவும், விவசாய தொழிலாளர்களாகவும் உள்ளனர். இங்கே ஏராளமான ஏக்கர் நிலங்களில் தென்னை மர கன்றுகள் வைத்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் மதுரை வேளாண்மை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகள் இப்பகுதிக்கு வந்திருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ், ஊரக வேளாண் அனுபவப் பயிற்சி மேற்கொள்வர். அதன் ஒரு பகுதியாக மதுரை வேளாண் கல்லூரி மாணவி ஜெயசங்கரி, மொட்டனூத்து ஊராட்சி பகுதியில் விவசாயிகள் தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டு தாக்குதல் இருப்பதாக கூறியதை தொடர்ந்து, அதற்கு தீர்வாக ஆமணக்கு புண்ணாக்கு பொறி குறித்து விளக்கி, அதன் மூலம் காண்டாமிருக வண்டு தாக்குதலில் இருந்து எப்படி தென்னை மரங்களை பாதுகாப்பது என்ற செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் இந்த செயல் விளக்கம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment