பாப்பம்மாள்புரம் பகவதி அம்மன் கோவிலில் இளந்தென்றல் நண்பர்கள் சார்பில் திருவிளக்கு பூஜை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பாப்பம்மாள் புரம் பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு நாளான நேற்று இளந்தென்றல் நண்பர்கள் குழு சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டனர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பூஜைக்கு தேவையான எண்ணெய் ,மஞ்சள், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருள்கள் அனைத்தையும் இளந்தென்றல் நண்பர்கள் குழு சார்பாக வழங்கப்பட்டது . நேற்று அட்சய திருதியை நாள் என்பதால் அம்மனுக்கும் ,உற்சவர் மூர்த்திகளுக்கும் ரூபாய் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது . அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் ஆசி வழங்கினார் .அதனை தொடர்ந்து வேத அந்தணர்கள் மந்திரம் ஓத அம்மனுக்கு போற்றி புகழ் பாடி குத்துவிளக்கிற்கு பூக்கள் தூவி வணங்கினார்கள்.குடும்பத்தில் உள்ள கணவன்மார்கள் ,குழந்தைகள் மற்றும் உறவினர்கள் நலமுடன் வாழவும், நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் பூஜையின் போது வேண்டிக் கொள்ளப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment