ஆண்டிபட்டி பால நாகம்மாள் கோவிலில் சித்திரைத் திருவிழா. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தினர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 12 May 2024

ஆண்டிபட்டி பால நாகம்மாள் கோவிலில் சித்திரைத் திருவிழா. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தினர்.

 


ஆண்டிபட்டி பால நாகம்மாள் கோவிலில் சித்திரைத் திருவிழா. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தினர்.


     தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நேதாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு பால நாகம்மாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


ஆண்டிபட்டி பேருந்து  நிலையத்திலிருந்து பால் குட ஊர்வலம் புறப்பட்டு ரயில்வே பீடர் ரோடு வழியாக சென்று கோவிலை அடைந்தது. அப்போது பக்தர்கள் அருள் வந்து ஆடியபடி வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் வகையில் பொதுமக்கள்  தண்ணீரை வாசலில் தெளித்தும், பக்தர்கள் மேல் ஊற்றியும் வெப்பத்தை தனித்தனர் .பக்தர்கள் சுமந்து வந்த பால் குடத்தில் இருந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்து, தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ஜி. கே.பாண்டியன், நாட்டாமை பிஆர்கே. கண்ணன், செயலாளர் முருகேசன், பொருளாளர் குமாரசாமி உட்பட விழா குழுவினர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad