ஆண்டிபட்டியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக இலவச முழு மாதிரி தேர்வு.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ,குரூப் 2 , குரூப் 1 ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளது. குறிப்பாக அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் குரூப் 4 தேர்வில் லட்சக்கணக்கானோர் எழுத உள்ளனர். இந்த நிலையில் அரசு நடத்தும் போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு ஆண்டிபட்டியில் உள்ள வேள்பாரி டிஎன்பிஎஸ்சி அகாடமி பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாதிரி போட்டி தேர்வில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வு எழுதினர் .அரசு தேர்வுக்கு கொடுப்பது போல் அச்சு அசலான வினாத்தாள்கள் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் இந்த வினாத்தாள்களை ஆர்வத்துடன் பூர்த்தி செய்தனர். இது குறித்து வேள்பாரி நிறுவன நிர்வாகி கூறும்போது இந்த ஆண்டு ஐந்து மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் டிஎன்பிசி தேர்வு எழுதும் போது மாணவர்கள் பதட்டம் இல்லாமல், பயமில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் மனத்தை பக்குவப்படுத்தும் நோக்கில் இந்த மாதிரி தேர்வு நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment