முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா: - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 June 2024

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா:


 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா: பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உணவு வழங்கல்: பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் வழங்கினார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக பெரியகுளம் நகர் கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பெரியகுளம் நகர் கழகத்தின் சார்பில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலன் பெற்று பயனடைந்த வரும் அனைத்து உள் நோயாளிகள் மற்றும் மனநல காப்பக சிகிச்சை மையத்தில் (ECRC) சிகிச்சை  வரும் நபர்களுக்கு இலவச உணவுகள் வழங்கப்பட்டன. பெரியகுளம் நகர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நகர் கழக அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு இலவச உணவுகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது கழக மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டி, பெரியகுளம் திமுக நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ், பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகர துணைச்செயலாளர் மு.சேதுராமன் .இணை இயக்குனர் ( மருத்துவம், ஊரகம் மற்றும் குடும்ப நலம்) மரு.ரமேஷ் பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.குமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், திமுக நகர் கழக நிர்வாகிகள், பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர். பால்ராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad