ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோவில் கிராமத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோவில் ,மறவபட்டி, பாலக்கோம்பை , தெப்பம்பட்டி, மரிக்குண்டு, கதிர் நரசிங்கபுரம், தேவர் சிலை, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தென்னை மரங்கள் வைத்து விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
தற்போது கோடை காலம் என்பதால் தென்னை மரத்தில் சுருள் வெள்ளை ஈக்களால் தென்னையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இந்நிலையில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமங்களில் தங்கியிருந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவி மு.ஹரிதா ஊரக வேளாண் அனுபவபயிற்சி திட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி வட்டாரத்தில் பணியாற்றி வருகின்றார் . ஏத்தகோவில் என்னும் கிராமத்தில் மஞ்சள் ஒட்டும் பொறி பொருத்துவதால் இந்த சுருள் ஈ யை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்தார். மற்றும் அதன் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் பயனடைந்தாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment