பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானலில் திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு திரும்பும் பொழுது கொடைக்கானல் மலைச்சாலை டம் டம் பாறை அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் வேனில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் கிராமத்திலிருந்து நேற்று காலை கொடைக்கானல் மூஞ்சிகள் என்னும் இடத்திற்கு வேனில் திருமண நிகழ்ச்சிக்காக 25க்கும் மேற்பட்டோர் சென்று விட்டு பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டிக்கு திரும்பி கொண்டு இருந்த போது பெரியகுளம் தேவதானப்பட்டி கொடைக்கானல் மலைச்சாலை டம்டம் பாறை பகுதி வந்த போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் வேனில் பயணித்த 20க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயத்துடன் உயிர் தப்பினர் இச்சம்பவம் அறிந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் முதலுதவி சிகிச்சை முடிவுற்றதும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக ஒரு சிலர் அனுப்பப்பட்டு வருகின்றனர் மேலும் இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பெரியகுளம் செய்தியாளர்: பால்ராஜ்
No comments:
Post a Comment