தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 June 2024

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


 தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் 



 தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகளை நூற்றுக்கணக்கான பணியாளர்கள் செய்து வருகிறார்கள்

 


இந்த தொழிலாளர்கள் தூய்மைப்பணி மட்டும் இல்லாமல் அரசு பணியாளர்கள் செய்யக்கூடிய அத்தனை பணிகளையும் கட்டாயப்படுத்தி செய்து வருகின்றார்கள் அதேபோல் அரசு ஊழியராக பணியாற்றும் பணியாளர்கள் எந்தவித பணியும் செய்யாமல் இவர்களை மட்டுமே பணி செய்ய சொல்லி கட்டாய படுத்தி வருவதோடு இல்லாமல்-கீழ்தரமாக நடத்தப்படுவதாக புகார்செய்யப்பட்டு வருகின்றார்கள் 



 மேலும் இந்த ஒப்பந்த பணியாளர்களைஅங்கு பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் அரசு பணியாளர்கள் மிரட்டியும் அச்சுறுத்தியும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துவதாக பலமுறை அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் செய்தும் எந்தவித பலன் இல்லை என்று மன வேதனையோடு தெரிவிக்கின்றார்கள் 



 ஒப்பந்த பணியாளர்களுக்கு வரும்பணி பலன்களைஅங்கு பணியாற்றும் ஒருசில அரசு ஊழியர்களே திட்டமிட்டு தடுப்பதாகவும்-கொரானா காலத்தில் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கிய நிதியை தரவில்லை என்றும் கூறுகின்றார்கள்-



மேலும் நேர்மையாக பணியாற்றும் ஒப்பந்தப்பணியாளர்களை அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் சிலர் செய்யும் தவறுகளை வெளியே சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை திட்டமிட்டு வெளியேற்றி வரும் அவலநிலை தொடர்ந்து நடக்கிறது என்றும்-இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்ககூடிய அனைத்து பணி பாதுகாப்பு - சம்பள உயர்வு- மதிப்புடன் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல்  - காத்திருப்புபோராட்டம் நடைபெற்று வருகிறது


செய்தியாளர்: பால்ராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad