ஐந்து கிராமங்கள் ஒன்று சேர்ந்து நடத்திய அன்னை மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 17 June 2024

ஐந்து கிராமங்கள் ஒன்று சேர்ந்து நடத்திய அன்னை மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

 


ஐந்து கிராமங்கள் ஒன்று சேர்ந்து நடத்திய  அன்னை மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக  விழா.


ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் பழமைவாய்ந்த மகாலட்சுமியம்மன் கோவில் உள்ளது. கன்னியப்பிள்ளைபட்டி கொப்பையம்பட்டி கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த ராயர் குல குறும்பா இன வேம்பு குல கனிச வம்சத்தார்  ஒன்று சேர்ந்து  வழிபடும் கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள  இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பனிரெண்டு  ஆண்டுகள் முடிந்த நிலையில் ,நேற்று ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விநாயகர், அனுமன் ,நவக்கிரகம், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மனுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


2 நாட்களுக்கு முன்பு  கணபதி ஹோமத்துடன் துவங்கிய கும்பாபிஷேக விழா நான்கு கால யாகவேள்வி பூஜைகள் நடைபெற்று முடிந்து , நேற்று காலையில்  பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து  கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களின் மீது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதையடுத்து கூடியிருந்த பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கருவறையில் மகா அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.


 இவ்விழாவில்  ஐந்து கிராமங்களை  சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.


செய்தியாளர்: தவமணி

No comments:

Post a Comment

Post Top Ad