சோத்துப் பாறை அணையில் அதிகாரிகள்ஆய்வு : - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 June 2024

சோத்துப் பாறை அணையில் அதிகாரிகள்ஆய்வு :

 


சோத்துப் பாறை அணையில் அதிகாரிகள்ஆய்வு :


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப் பாறை அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு தென் மண்டல தலைவர் அஜய்குமார் சின்ஹா தலைமையிலான அணைகள் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.தேசிய அணைகள் பாதுகாப்பு  மண்டல இயக்குனர் கிரிதர், வசந்தகுமார் துணை இயக்குனர், கார்த்திகேயன், அமித் மிட்டல், பங்களா ஹேமந்த் நித்யா, வசுந்தரா சர்மா, ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அணையின் தரம், கட்டிட உறுதித் தன்மை, அணையில் நீர்த்தேக்கம், வெள்ளப்பெருக்கு காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அணைகள் பாதுகாப்பு  உள்ளிட்டவைகள் சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொண்டனர். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு  உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் பொதுப்பணித் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர்-பால்ராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad