கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ 18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை திறப்பு விழா:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட கைலாசபட்டி13 வது வார்டு பகுதியில் 15 வது நிதிக்குழு மானியம் 2022.2023 திட்டத்தின் கீழ் ரூ 18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.எஸ்.சரவணக் குமார் அறிவுறுத்தலின்படி தென்கரை பேரூராட்சித் தலைவர் நாகராஜ் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்வின் போது பேரூராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்- பால்ராஜ்
No comments:
Post a Comment